தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்
பி ஆர் பாண்டியன் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நடிகர் விஜய் அரசியலுக்கு துவக்குவது அவரது உரிமை. அரசியல் சட்டப்படி அனைவரும் கட்சி துவங்க வாய்ப்பு இருக்கிறது.ஆனால் காவிரி முல்லைப் பெரியாறு
பிரச்சனைகளில் கர்நாடகா, கேரளாவிற்கு எதிராக பேச மறுக்கிறார். தமிழக நீராதார உரிமைகள் குறித்த தனது நிலைபாட்ட தெளிவு படுத்தவில்லை. மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க மறுக்கிறார். இந்நிலையில் அவர் கட்சி தொடங்குவது ஏற்கத்தக்கது அல்ல. முதலில் மக்கள் பிரச்சினைகளில் தனது கொள்கை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
மக்களுக்கான போராட்டங்களில் கலங்காள வேண்டும். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,தீபாவளி பண்டிகை ஒட்டி மாநாடு நடத்தப்படுவது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறுவது வெளிப்படுகிறது.
மாநாட்டிற்கு முன்னதாக விவசாயிகள், மக்களுக்கான பிரச்சனைகளில் தனது கொள்கை நிலையை தெளிவுபடுத்தி கட்சி துவங்க முன்வர வேண்டும். அணைக்கட்டுவதற்கான அனைத்து கட்சிகளையும் சந்தித்த நிலையில், பதிவு செய்யப்பட்ட கட்சி என்கிற அடிப்படையில் எங்களை சந்தித்து கோரிக்கையை பெறுவதற்கு கூட அவர் அச்சப்படும் நிலை தொடர்கிறது.
இந்நிலையில் இருந்து தன்னை மாற்றிக் கொண்டு கட்சி தொடங்கினால் பயனளிக்கும், இல்லையேல் ரஜினி போல தோல்வியில் முடியும் என்றார்.
சென்னை மண்டல செய்தி தொடர்பாளர் சைதை ப.சிவா உடனிருந்தார்
The short URL of the present article is: https://reportertoday.in/ghgv