சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் எப்போதும் ஹாஷ் டேக் மூலம் தங்கள் நட்சத்திரங்களின் திரைப்படங்களை ட்ரெண்ட் செய்து வருவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது ட்விட்டர் இந்தியா கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் அதிகம் ட்ரெண்ட் செய்யப்பட்ட ஹாஷ் டேக் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் தல அஜித்தின் வலிமை திரைப்பட ஹாஷ் டேக் முதலிடம் பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து விஜய்யின் மாஸ்டர் திரைப்பட ஹாஷ் டேக் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் இணையத்தில் இந்த சாதனை குறித்து கொண்டாடி வருகின்றனர். இதோ அந்த பட்டியல்.