வர்த்தக பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்களின் விலை 105ரூ உயர்ந்து சென்னையில் 2,185 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வர்த்தக பயன்பாட்டிற்கு விற்கப்படும் சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையானது ரூ. 105 உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலையானது ரூ. 27 உயர்ந்துள்ளது.
வர்த்தக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களின் விலை மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றும், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வானது மார்ச் 1 முதல் அமலுக்கு வருகிறது.
- விலை உயர்வு படி டெல்லியில், 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையானது 105ரூ உயர்ந்து 2,012ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து மும்பையில் 19 கிலோ சிலிண்டர் விலை 1,962 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 2,089 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. இதன்படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையானது 2,185ரூபாக்கு விற்பனையாகிறது. வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 915 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒவ்வொரு மாதமும் மாற்றப்படும் எரிவாயு விலையானது, கடந்த மாதம் 91.50 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.