இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை குறுகிய கால ஆனால் தீவிரமான பாதிப்பாக இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. , அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஆண்டனி பவுசி கூறுகையில், அமெரிக்காவில் ஒமைக்ரான் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரிக்கும், தினம் தினம் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்துக் கொண்டே போகும் என்று வெள்ளை மாளிகையின் முதன்மை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆண்டனி பவுசி தெரிவித்திருந்தார். “இந்தியாவில் இன்னும் சில நாட்களில், சொல்லப்போனால் இந்த வார இறுதிக்குள், புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மிகக் கடுமையாக அதிகரிக்கும். இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் மிக கணிசமாக உயரும்” என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஜட்ஜ் பிசினஸ் ஸ்கூல் பேராசிரியர் பால் கட்மேன் அச்சத்தை கிளப்பியுள்ளார்.

இந்தியாவின் கொரோனா டிராக்கரை உருவாக்கிய கட்டுமேன் மற்றும் அவரது ஆராய்ச்சியாளர்கள் குழு, நமது நாட்டில் ஆறு மாநிலங்களைக் கண்டறிந்துள்ளனர். அந்த 6 மாநிலங்களில் கடந்த 24ந்தேதி நிலவரப்படி புதிதாக பாதிக்கப்படுவோர் விகிதம் 5 சதவீதமாக இருந்தது. ஆனால் இரண்டே நாட்களில் மேலும் 11 மாநிலங்களில் இந்த பரவல் விகிதம் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பல்கலைக்கழகம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா இந்தியா டிராக்கர் மென்பொருள் மூலமாக இது தெரியவந்துள்ளது. மேலும், கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகம் நடத்திய ஆய்வில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3ந்தேதி மூன்றாவது அலையில் தாக்கம் உச்சமடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons