கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை தடுப்பதற்காக மீண்டும் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மருத்துவ நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் அவர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டுமா? என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் கொரோனா அதிகரிப்பதால் கூடுதல் கட்டுப்பாடு என்னென்ன விதிக்கலாம் என ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர் .