ஹைதராபாத் : தமிழில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனர் லிங்குசாமி முதல் முறையாக நேரடி தெலுங்கு திரைப்படத்தை இயக்கி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.
இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல நல்ல படங்களைத் தொடர்ந்து தயாரித்து வந்த லிங்குசாமியின் இயக்கத்தில் தெலுங்கில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்