சைபர் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சென்னை கோயம்பேட்டில் உள்ள செயிண்ட் தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ‘சைபர் செக்யூரிட்டி கிளப்’ (Cyber Security Club) மற்றும் ‘போதைப்பொருள் தடுப்பு மன்றம்’ (Anti-Drug Club) இணைந்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் உள்ள செயிண்ட் தாமஸ் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர் ஏ. அமல்ராஜ், ஐபிஎஸ் (Dr. A. Amalraj IPS) சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், தற்காலத்தில் அதிகரித்து வரும் சைபர் குற்றங்கள், ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ (Digital Arrest) போன்ற ஆன்லைன் மோசடிகள், போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பேராபத்துகள் மற்றும் சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மாணவர்களிடையே விரிவாக எடுத்துரைத்தார்.
முன்னதாக, மேஜிக் கலைஞர் தயா தனது மாயாஜால (Magic) சாகசங்கள் மூலம் மாணவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் சுவாரஸ்யமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
இவ்விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.