கோஷமிட்டு அணி அணியாக திரண்டு வந்த மாற்றுத்திறனாளிகள்!
சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருந்து மாற்றுத்திறனாளிகள் ஆணையம் வரை நீண்ட வரிசைகளாக பேரணியாக கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக வருகை தந்தனர்.
அவர்களுடைய முக்கிய கோரிக்கைகளாக படித்த பட்டதாரியாக இருக்கும் தங்களுக்கு உரிய அரசு வேலைகள் வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வரை நேரடியாக பார்த்து நேரடியாக கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்தனர்.
தற்போது போலீசார் அடக்குமுறையில் ஈடுபட்டால் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாலை மறியலில் ஈடுபடுவோம் என பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.