திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம் சோமாசி பாடி கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பாக பாலிற்கு கூடுதலாக 10 ரூபாய் உயர்த்த கோரி

சாலையில் பாலை ஊற்றி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தக் கோரியும் ,

 

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ. 10 உயர்த்த ஏற்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும்,

என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் முக்கிய அறிவிப்பாகும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் !

 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியம் சோமாசி பாடி கிராமத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பாக

 

தமிழ்நாடு அரசு தற்போது வழங்கியுள்ள பால் கொள்முதல் உயர்வு விவசாயிகளுக்கு போதுமானதல்ல என்று தமிழக அரசுக்கு எதிராக விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

 

மேலும் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் கால வாக்குறுதிப்படி பாலின்

லிட்டருக்கு 44 ரூபாய் வழங்குவோம் என தெரிவித்ததன் படி ,

 

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தக் கோரியும் , பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ. 10 உயர்த்த ஏற்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் முக்கிய அறிவிப்பாகும் என தெரிவித்துள்ளனர்

 

இதைத் தொடர்ந்து

தற்போது (ஆவின்)

மாட்டுபால் (பால் + ஊக்கத்தொகை) . 34 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்றும்

 

மற்ற மாநிலங்கள்

கர்நாடகாவில் 50 ரூபாயும் ,மத்திய பிரதேசம் மாநிலத்தில் 62 ரூபாயும்

பஞ்சாப் மாநிலத்திலும் 65, ரூபாயும், அந்தந்த மாநில அரசு விவசாயிகளுக்கு பால் உற்பத்தி செய்யும் கொள்முதலுக்கு உயர்ந்த விலை வழங்கி வரும் நிலையில்

 

தமிழகத்தில் மட்டும் ஏன் தமிழக அரசு பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு குறைந்த விலை வழங்குகின்றனர் என கேள்வி எழுப்பி உள்ளனர்.

 

மேலும் இதைத்தொடர்ந்து

பால் உற்பத்தி செய்ய மாட்டிற்கு தீவனங்கள், ஆள்கூலி விலைகள் தொடர்ந்து உயர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் ,

பால் கொள்முதல் விலை உயர்வின் பலன் விவசாயிகனன் சென்றடையவில்லை என்றும் தொடக்கப் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு விளிம்புத் தொகை உயர்த்த வேண்டும், ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க, விற்பனை விலையையும் உயர்த்த வேண்டும்,

தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *