மதுரை: இன்றைய தினம் வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. கணவனின் ஆயுள் நீடிப்பதற்காக இன்றைக்கும் பல பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுகின்றனர். அதே போல கன்னிப்பெண்களும் கண்நிறைந்த கணவன் வேண்டும் என்று நோன்பிருந்து அன்னையை வழிபடுகின்றனர். கணவனுக்காகவும் அவரது ஆயுள் பலத்திற்காகவும் விரதம் இருந்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.