பொங்கல் திருநாளை முன்னிட்டு, நேற்று முதல் நாளில் சென்னையிலிருந்து1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக, 16 ஆயிரத்து 932 பேருந்துகள் நேற்று (ஜன. 12) முதல் இயக்கப்படுகின்றன. சென்னை, கோவை, திருப்பூர், சேலம் போன்ற தொழில் நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்பட அனைத்து மாவட்டங்களுக்கு ஜன.12 முதல் 14-ஆம் தேதி வரையும், ஜன.16 முதல் 18-ஆம் தேதி வரையும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் நாளில்சென்னையிலிருந்து1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 586 பேருந்துகள் என மொத்தம் 2,686 பேருந்துகளில் 1,34,300 பேர் பயணித்துள்ளனர்.

Byadmin

Jan 13, 2023

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons