நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், நாசர் ஆகியோரின் மகன்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகின்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சி 7வது வார்டில் போட்டியிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானின் மகன் மொக்தியார் மஸ்தான் வெற்றி பெற்றுள்ளார்.
அதேபோல், ஆவடி மாநகராட்சியின் 4வது வார்டில் போட்டியிட்ட அமைச்சர் நாசரின் மகன் ஆசீம் ராஜா வெற்று பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.