ராமநாதபுரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்குவதில் பாரபட்சம்.
ராமநாதபுரம்,மார்ச்.27:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அவர்களால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதையடுத்து ராமநாதபுரத்தில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு சம்பந்தமாக செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கப்பட்டன.அது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட அனைத்து செய்தியாளர்களும் ராமநாதபுரம் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் கிருமிநாசினி பாட்டில்களை வாங்குவதற்காக சென்றுள்ளனர் இதில் முறைப்படி என்னவென்றால் ராமநாதபுரம் மக்கள் தொடர்பு அலுவலர் மூலம் தான் செய்தியாளர்களுக்கு தகுந்த மரியாதைகளுடன் வழங்கத்தக்க பொருள்களை வழங்க வேண்டும் ஆனால் பி.ஆர்.ஓ அலுவலகத்திலோ என்ன நடந்தது என்றால் புரோக்கர்கள் போல டிரைவர்களை வைத்து கூவிக்கூவி கிருமி நாசினி யை விற்று வந்துள்ளனர். இந்த அதிர்ச்சி தகவலை கேட்டு நாம் அதன் உண்மையை ஆராய பி.ஆர்.ஓ அலுவலகம் சென்றோம் நாமும் நம்மை யார் என்று அறிமுகப் படுத்திக் கொள்ளாமல் சார் இருக்கிறாரா என்று கேட்டோம் அந்த நேரத்தில் அங்கு ஓட்டுநராக பணிபுரியும் ஒருவர் சார் போர்ட் மீட்டிங்கில் இருக்கிறார் என்று தெரிவித்தார் அதனை தொடர்ந்து இங்கு செய்தியாளர் களுக்கான கிருமிநாசினி வழங்கப்பட்டு வருகிறது நாங்களும் செய்தியாளர்கள் தான் என்று கேட்டதற்கு அவர் நீங்கள் வாட்ஸ்அப் குழுவில் இருக்கிறீர்களா?என்று கேட்டார். அதற்கு பத்திரிக்கையாளர்கள் என்ன குழு என்று விசாரித்தனர்.அதன்பின்னர் குழுவில் உள்ளவர்களுக்கு மட்டுமே கிருமிநாசினி பாட்டில்கள் வழங்கச் சொல்லி மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறியுள்ளார். அதனைத்தொடர்ந்து விரக்தியடைந்து வெளியேறிய பத்திரிக்கையாளர்கள் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஐ தொடர்பு கொண்டு சார் எங்களுக்கெல்லாம் கிருமிநாசினி பாட்டில் கிடையாதா என்று கேட்டதற்கு பிஆர்ஓ குறிப்பிட்ட பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே கிருமிநாசினி பாட்டில் வந்தடைந்துள்ளது. அடுத்த முறை வரும்பொழுது தங்களுக்கு கண்டிப்பாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.இது மாவட்ட ஆட்சியரின் உத்தரவா? அல்லது பிஆர்ஓ வின் தனிப்பட்ட முடிவா?என்று பத்திரிகையாளர்கள் பலரும் விரக்தியுடன் வீடு திரும்பினர்.
இதில் குறிப்பாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் பெரிய பத்திரிக்கையாளர்களை தான் கொரோனா வைரஸ் தாக்குமா?சிறு பத்திரிக்கையாளர்களை கொரோனா வைரஸ் தாக்காதா? மாவட்ட ஆட்சியர் தான் இதற்கு ஒரு நல்ல முடிவு சொல்ல வேண்டும்.
பத்திரிகையாளர்களை சிறு குறு பெரிய பத்திரிகைகள் என வேறுபடுத்தி ஒரு தலைப்பட்சமாக மாவட்ட நிர்வாகம் செயல்படலாமா….?
கொரோன வைரஸ் குறித்து செய்திகளை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உயிரை துச்சமன நினைத்து செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்கு அரசு பாரபட்சமின்றி நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என நாளையதீர்ப்பு இதழின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்….!
சிறியூர் செல்லபாண்டி