திரும்பப் பெறப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களையும் எந்த வடிவிலும் மீண்டும் திரும்பக் கொண்டுவரும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை. விவசாயிகள் மத்தியில் காங்கிரஸ் உருவாக்கும் குழப்பத்தில் யாரும் சிக்க வேண்டாம் என்று மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்துள்ளாா்.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அண்மையில் நடைபெற்ற வேளாண் நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. வேளாண் சட்ட விவகாரத்தில் நாங்கள் ஓா் அடி பின்னோக்கி எடுத்து வைத்தாலும், விவசாயிகளின் நலனுக்காக அரசு எப்போதும் முன்னோக்கி நகரும் என்று பேசியது மீண்டு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை காங்கிரஸ் கட்சி திரும்பப் பெறப்பட்ட வேளாண் சட்டங்களை வேறுவடிவில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தது. கண்டமும் தெரிவித்து அறிக்கை வெளியிட்டது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் வெளியிட்ட அறிக்கையில், விவசாயிகளின் நலன் கருதி, வேளாண் சீா்திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. சில காரணங்களாலும், தில்லியில் ஓராண்டு காலமாக விவசாயிகள் நடத்திய தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததாதாலும், அந்த சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக பிரதமா் மோடி கடந்த நவம்பா் 19-ஆம் தேதி அறிவித்தாா். பின்னர் நவம்பா் 29-இல் தொடங்கிய நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரின் முதல் நாளில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டது.
எனவே, வேளாண் சட்டங்களைத் திரும்பக் கொண்டுவரும் நோக்கம் மத்திய அரசுக்கு இல்லை.
காங்கிரஸ் கட்சி தனது தோல்விகளை மறைப்பதற்காக விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி எதிா்மறை பிரசாரங்களை செய்து வருகிறது.
இந்த குழப்பத்தில் விவசாயிகள் சிக்கிக்கொள்ளாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தோமர் கூறினார்.