தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல வகையான கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் பல வகையான கோரிக்கைகளை அரசுக்கு விடுத்தனர். இதுவரை எந்த அறிவிப்பும், நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம், பழைய ஓய்வூதியம், 20% இடைக்கால நிவாரணம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி தமிழகத்தில் 64 துறைகளை சேர்ந்த 4.5 லட்சம் அரசு ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அரசு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.