மாமன்ற உறுப்பினர் உமா ஆனந்த் நன்றி தெரிவித்துப் பேசினார்.
அடுத்த மாத இறுதியில், நான் மாமன்ற உறுப்பினர் பதவியேற்று 4 ஆண்டுகள் முடிய உள்ளது. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் இந்த 4 ஆண்டுகளில் நான் கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன்.
துணை மேயர் மகேஷ் குமார் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற திராவிடமாடல் அரசு உறுதுணையாக இருந்தது என்று தெரிவித்தார்.
எனக்கு ஒத்துழைப்பு கொடுத்ததற்கும் நான் கேட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்ததற்கும் மனமார்ந்த நன்றி.
நான் பெருமையுடன் இந்த மாமன்ற கூட்டத்தில் பதிவு செய்து மகிழ்ச்சியுடன் நான் என் பகுதி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளில் 80 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டேன்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், கே என் நேரு, மாநகராட்சி மேயர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.
நான் பாஜகவை சேர்ந்தவள்; அதற்காக எனக்கு செய்யக்கூடாது என்ற மனநிலை இல்லாமல் பணிகளை செய்ததற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,
எண்பது சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தாலும் இன்னும் 20 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
தங்கும் விடுதிகளை முறைப்படுத்த முடியவில்லை. இன்னும் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டி இருக்கிறது.
அடுத்த ஆண்டு நான் கொடுக்கும் வாக்குறுதிகளை 100 சதவிகிதம் நிறைவேற்றி விட்டேன் என்றோ, அல்லது 90சதவீதம் நிறைவேற்றினேன் என்ற பெருமையைக் கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
சென்னையில் உள்ள தங்க நாற்கர சாலைகளில் ஏதாவது ஒரு சாலைக்கு அடல் பிகாரி வாஜ்பாய் பெயரை வைக்க கோரிக்கை வைக்கிறேன்.
முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என துணை மேயர் தெரிவித்த நிலையில் முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்த நிலையில் நகராட்சி துறை செயலாளரிடம் தெரிவிக்க சொல்லி உள்ளார்.
ஹாஸ்டல் லைசன்சைப் பொறுத்தவரை மாவட்ட ஆட்சியர் தான் முடிவெடுக்க வேண்டும்.
உதவி மையம் கேட்டிருந்தீர்கள் அதற்கு மாநகராட்சி உடன் இணைந்து செயல்படுத்த முயற்சி எடுப்போம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.