எழும்பூரில் தென்னிந்திய பௌத்த கூட்டமைப்பு சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எந்த அரசியல் தலைவர்கள் செயல்படுவார்களோ அவர்களுக்கு மட்டுமே
தங்களுடைய லட்சக்கணக்கான பௌத்த குடும்பத்தினரின் ஒட்டுமொத்த ஓட்டுகள் வழங்கப்படும் என அறிவிப்பு!

சென்னை எழும்பூரில்
தென்னிந்திய பௌத்த கூட்டமைப்பு தமிழ்நாடு தலைமை ஒருங்கிணைப்பாளர் பிக்கு மௌரியர் புத்தா தலைமையில் செய்தியாளர்களை சந்தித்தவர்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன ,

அரசியல் கட்சிகள் வெளியிட்டு வரும் தேர்தல் அறிக்கைகளில் தமிழ்நாடு பௌத்தர்கள் குறித்து எந்தவிதமான குறிப்புகளும் இல்லை என்பது மன வேதனை அளித்திருப்பதாகவும் தெரிவித்ததோடு

தங்களுக்கான 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர் முதற்கட்டம் கோரிக்கைகளாக

1) தமிழ்நாடு பௌத்தர்களுக்கு தங்களின் மத வழிபாட்டு கடைமையை நிறைவேற்றுவதற்காக மாவட்ட தோறும் அரசு சார்பில் புத்த விகார்களை ஏற்படுத்தி தர உறுதி அளிக்க வேண்டும் என்றும்

2) இஸ்லாமிய சிறுபான்மை சமுதாயங்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை போலவே தமிழ்நாட்டு பௌத்தர்களுக்கும் 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்றும்

3) வரலாறு செழுமை வாய்ந்த இந்திய பௌத்த வரலாற்றை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பாட புத்தகங்களில் கட்டாய பாடமாக வைக்க வேண்டும் என்றும்

4) தமிழ்நாடு எல்லைக்குட்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் ஆய்வு கல்வி நிறுவனங்களில் பௌத்த பெரும் இலக்கியங்கள் குறித்த ஆய்வுகளை நடத்துவதற்கு தனி ஆய்வு மையங்கள் ஏற்படுத்திட தர வேண்டும் என்றும்

5) தமிழக அருங்காட்சியங்களில் கேட்பாரற்று கிடைக்கின்ற, தமிழ்நாடு முழுவதும் வயல்வெளிகளில் இந்து கோயில்களில் தனியார் நிலங்களில் சிதறிக் கிடக்கின்ற புத்தர் சிலைகள் மற்றும் பௌத்த சின்னங்கள் அனைத்தையும் ஒருங்கிணைந்த பௌத்த ஆய்வு அருங்காட்சியகம் ஒன்று தொடக்கப்பட வேண்டும் , எஞ்சிய புத்தர் சிலைகள் அடையாள சின்னங்கள் அனைத்தும் அங்கே காட்சி படுத்தப்பட வேண்டும் ,

6) பெண் உயர்கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் மணிமேகலை பெயரில் பெண்களுக்கான பௌத்த பல்கலைக்கழகம் சென்னையில் தொடங்கப்பட வேண்டும் என்றும்

6) இந்த கோரிக்கைகளை ஏற்று செயல்படுத்த முன் வரும் கூட்டணிக்கு தமிழ்நாடு பௌத்தர்கள் தேர்தலில் ஆதரிப்பதாகவும்
செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *