பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டிச. 12 முதல் 14ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனையொட்டி சென்னையில் 6 பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்கள் சிரமமின்றி சொந்த ஊர்களுக்குச் சென்றுவரும் வகையில், போக்குவரத்துத் துறை சார்பில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னையில் மாதவரம், கே.கே. நகர், தாம்பரம், தாம்பரம் ரயில் நிலையம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் பொங்கல் சிறப்புப் பேருந்துகளுக்கான நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

படிக்க |பொங்கலுக்கு 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: தமிழக அரசு அறிவிப்பு

அந்த பேருந்து நிலையங்களில் எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1. மாதவரம் புதிய பேருந்து நிலையம்: செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.

2. கே.கே. நகர் பேருந்து நிலையம்: இசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள்

3. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்: திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்

4. தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்: திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துபட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.

படிக்க |ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: புகார் எண்கள் அறிவிப்பு!

5. பூவிருந்தவல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தம்: (பூவிருந்தவல்லி மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை அருகில்) வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள்.

6. புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம், கோயம்பேடு: மேற்குறிப்பிட்டுள்ள ஊர்களைத்தவிர, இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அதாவது,

மயிலாடுதுறை, அரியலூர்,

ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons