சென்னை மாநகராட்சி 23 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இதன்படி எந்த மண்டலத்தில் எத்தனை வார்டுகள் என்பது தொடர்பான வரைவு அறிக்கையை சென்னை மாநகராட்சி தயார் செய்துள்ளது.

2011-ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி 10 மண்டலங்கள் இருந்தன. சென்னை மாநகராட்சி விரிவாக்கத்திற்கு பிறகு மண்டலங்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரிக்கப்பட்டு 200 வார்டுகளாக மறுசீரமைப்பு செய்யப்பட்டன. ஆனால் மாநகராட்சியில் 23 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில், சென்னை மாவட்டத்தில் 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே உள்ளன. மற்ற ஆறு சட்டசபை தொகுதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில், சட்டசபை தொகுதிக்கு ஏற்ப, மண்டலங்களை அதிகரிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். இதன்படி சென்னை மாநகராட்சி மொத்தம் 23 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது. இதன்படி 23 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஏற்ற வகையில் 23 மண்டலங்கள் அமைக்கப்படவுள்ளன.

முதல் மண்டலத்தில் 18 வார்டுகள், 2வது மண்டலத்தில் 15 வார்டுகள், 3வது மண்டலத்தில் 7 வார்டுகள், 4வது மண்டலத்தில் 7 வார்டுகள், 5வது மண்டலத்தில் 7 வார்டுகள், 6வது மண்டலத்தில் 6 வார்டுகள், 7வது மண்டலத்தில் 6 வார்டுகள், 8-வது மண்டலத்தில் 6 வார்டுகள், 9வது மண்டலத்தில் 6 வார்டுகள், 10வது மண்டலத்தில் 13 வார்டுகள், 11வது மண்டலத்தில் 7 வார்டுகள், 12வது மண்டலத்தில் 6 வார்டுகள்,13 வது மண்டலத்தில் 7 வார்டுகள், 14வது மண்டலத்தில் 7 வார்டுகள், 15வது மண்டலத்தில் 7 வார்டுகள், 16வது மண்டலத்தில் 6 வார்டுகள், 17வது மண்டலத்தில் 15 வார்டுகள், 18வது மண்டலத்தில் 12 வார்டுகள், 19வது மண்டலத்தில் 7 வார்டுகள், 20வது மண்டலத்தில் 7 வார்டுகள், 21வது மண்டலத்தில் 8 வார்டுகள், 22வது மண்டலத்தில் 11 வார்டுகள், 23வது மண்டலத்தில் 9 வார்டுகள் என மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.

இதில் கொளத்தூர் தொகுதி உள்ள 3வது மண்டலத்தில் 64 முதல் 70 வரை உள்ள வார்டுகளும், பெரம்பூர் தொகுதி உள்ள 4வது மண்டலத்தில் 34 முதல் 37 வரை மற்றும் 44 முதல் 46 வரை உள்ள வார்டுகளும், துறைமுகம் தொகுதி உள்ள 7வது மண்டலத்தில் 54 முதல் 60 வரை உள்ள வார்டுகளும், எழும்பூர் தொகுதி உள்ள 12 மண்டலத்தில் 58, 61 ,77, 78, 99, 108 வார்டுகளும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியின் 13வது மண்டலத்தில் 63, 64, 114, 115, 116, 119, 120 வார்டுகளும், விருகம்பாக்கம் தொகுதி உள்ள 16வது மண்டலத்தில் 127, 128, 129, 136, 137, 138 வார்டுகளும், மயிலாப்பூர் தொகுதி உள்ள 20 வது மண்டலத்தில் 121 முதல் 129 வரை உள்ள வார்டுகள் மற்றும் 171 வார்டும், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் தொகுதிகள் உள்ள 22வது வார்டில் 181 முதல் 191 வரை உள்ள வார்டுகளும் வரவுள்ளன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons