2000 இடைநிலை ஆசிரியர்கள் 16ம் நாள் போராட்டத்தில் குண்டுகட்டாக அதிரடி கைது!
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி தமிழக அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை நடத்தி வந்த 2000, பேர் கொண்ட இடைநிலை ஆசிரியர்களை போலீசார் தாக்குதல் நடத்தி கைது செய்தனர்,
சென்னை எழும்பூர் அருகே இன்றுடன் 16 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் தமிழக முதலமைச்சர் இதுவரை தங்களை திரும்பிக் கூட பார்க்கவில்லை என்ற வேதனையில் உள்ளனர்.
கடந்த தேர்தலின் போது திமுக தேர்தல் அறிக்கை எண் 311ல், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர். ஆனால் அதை தற்போதைய ஆளும் திமுக அரசு தங்களின் ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி சென்னை திருச்சி, விழுப்புரம் ,என பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைநிலை பெண் ஆசிரியர்களை துன்பப்படுத்தும் விதமாக காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபடுவதுடன், போலீசாரின் சீருடை அல்லாத வகையில் உள்ளே நுழைந்து குண்டுக்கட்டாக கைது செய்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போலீசார் 2000,மேற்ப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை கைது செய்து 30 அரசு பேருந்துகளில் ஏற்றிச் சென்று சமூக கூடத்தில் அடைத்து வைத்துள்ளனர்
மேலும் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற ஒற்றைக் கோரிக்கையை தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தொடரும் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.