பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்படுகிறது.நாளை மறுநாள் கிளாம்பாக்கத்தில் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக 500 பஸ்கள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பஸ்களுடன் சேர்த்து மொத்தம் 982 பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதனிடையே பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோரின் வாகன நெரிசலை குறைக்க 3 நாட்களுக்கு காவல்துறை சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. * வெளியூரில் இருந்து சென்னை வரும் கனரக வாகனங்கள் பரனூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம்.* கனரக வாகனங்கள் இல்லா சாதாரண வாகனங்கள் ஒரகடம் சந்திப்பில் இருந்து திரும்பி ஸ்ரீபெரும்புதூர் வழியாக செல்லவும்.* திருப்போரூர் வழியாக சென்னைக்குள் நுழையும் கனரக வாகனங்கள் செங்கல்பட்டு வழியாக பயணிக்கவும்.* கனரக வாகனங்கள் ஜிஎஸ்டி, ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளில் செல்ல இன்று பகல் 2 மணி முதல் வரும் திங்கட்கிழமை வரை தடை.* பல்லாவரம் புதிய பாலத்தில் இன்று பகல் 2 மணி முதல் வரும் திங்கட்கிழமை பகல் 12 மணி வரை சென்னை நோக்கி ஒருவழி போக்குவரத்தாக தேவைக்கு ஏற்ப மாற்றப்படும். * ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்தை விரைவுபடுத்த ஆம்னி பேருந்துகள் வெளிவட்ட சாலை வழியாக திருப்பி அனுப்பப்படும். சிரமம் இன்றி மக்கள் சென்னைக்கு திரும்ப ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

The short URL of the present article is: https://reportertoday.in/16ii

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons