வேளாண்மை உழவர் நலத்துறையின் தோட்டக் கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையினர் சார்பில் 45 கோடியே 99 இலட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இப்பூங்காவினைப் பார்வையிட நுழைவுக் கட்டணமாகப் பெரியவர்களுக்கு – ரூ.100/- சிறியவர்களுக்கு – ரூ.50/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர சிறப்பு அம்சங்களை பார்வையிட தனித்தனியே கதிறந்த ஐந்தே நாளில்ட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஜிப்லைன், பறவையகம், இசை நீருற்று, கண்ணாடி மாளிகை உள்ளிட்டவற்றைப் பார்வையிட ரூ.40 முதல் ரூ.250 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், புகைப்பட கருவிகளுக்கு (camera) ரூ.100/- எனவும், ஒளிப்பதிவு கருவிகளுக்கு (video camera) ரூ.5000/- எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நேற்று இப்பூங்காவில் இருக்கும் ஜிப் லைனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இரு பெண்கள் 20 நிமிடங்கள் அந்தரத்தில் சிக்கி, பிறகு கயிறு மூலமாகப் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள எதிர்க் கட்சித் தலைவரும், அதிமுக தலைவருமான எடப்படாடி பழனிசாமி, “விடியா திமுக முதல்வர், தனது தந்தை திரு.கருணாநிதி பெயரில் சென்னையில் பூங்கா திறந்த வெறும் ஐந்தே நாட்களில், பூங்காவில் உள்ள ஜிப்லைன் (Zipline) பழுதடைந்து, அதில் பயணித்த இரு பெண்கள் 20 நிமிடங்கள் சிக்கி, அந்தரத்திலேயே இருந்து, பின் கயிறு மூலமாக கீழிறக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன.

அரசுப் பூங்கா; புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை நம்பி வரும் மக்களின் உயிரோடு, கலெக்ஷன்-கரப்ஷன்-கமிஷன் மட்டுமே கொள்கையாகக் கொண்ட விடியா திமுக அரசு, பாதுகாப்பற்ற உபகரணங்கள் கொண்டு விளையாடுவது கடும் கண்டனத்திற்குரியது.

திரு. கருணாநிதி பெயரிலான இந்த பூங்காவிற்குள் நுழையவே நூறு ரூபாய் கட்ட வேண்டுமாம். அது போக, ஜிப்லைனுக்கு 250 ரூபாய் என அதில் உள்ள வசதி ஒவ்வொன்றிற்கும் தனி கட்டணம் வசூல் செய்கிறது விடியா திமுக அரசு. இந்த பூங்காவை முழுவதும் சுற்றிப்பார்க்க 650 ரூபாய் ஆகிறது. தனியார் பொழுதுபோக்கு பூங்காக்கள் வசூலிக்கும் கட்டணத்திற்கு இணையாக இந்த திரு.கருணாநிதி பூங்காவிற்கு வசூலிக்கிறது விடியா திமுக அரசு. பூங்காவிற்கு வருகை புரியும் மக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

The short URL of the present article is: https://reportertoday.in/01ag

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp & Call Buttons