ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டீப் ஃபேக் எனப்படும் அசல் போன்ற போலி காணொளி உருவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் போலி காணொளி இணையத்தில் வைரலானது.
இந்தக் போலியான காணெளியை பரப்பியவா் மீது நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப் பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனா்.
ராஷ்மிகா மந்தனாவின் போலி வீடியோ தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விவரங்களை கோரி டெல்லி மகளிா் ஆணையம் சாா்பில் டெல்லி காவல்துறைக்கு வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து போலி வீடியோவை பதிவிட்டது யார் என்பது தொடர்பான தரவுகள் கோரி மெட்டா நிறுவனத்துக்கு டெல்லி காவல் துறை கடிதம் எழுதியுள்ளது. மேலும், தற்போது போலி வீடியோ தொடர்பான அடையாளம் தெரியாத நபர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் டெல்லி சிறப்புப் பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
போலி வீடியோ பரப்பினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.