போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்ட நிலையில், அதற்காக உக்ரைன் குழுவினர் இன்று பெலாரஸ் சென்றடைந்தனர்.
கடந்த வாரம் உக்ரைன் மீது ரஷியா போர்தொடுத்த நிலையில், ரஷிய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் முன்னேறி வருகிறது. போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், முன்னதாக, பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த ரஷியா அழைப்பு விடுத்திருந்தபோது உக்ரைன் மறுப்புத் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. இதனை ரஷிய பத்திரிகைகள் உறுதி செய்திருந்தன.
உக்ரைனில் ரஷியாவின் போர் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமான நகரங்களை ரஷியப் படைகள் கைப்பற்றியுள்ளன. இதனால் அந்த நகரங்களிலுள்ள மக்கள்அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
செர்னோபில் அருகே இன்றுபேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது. இதில் பங்கேற்க உக்ரைனின் பேச்சுவார்த்தைக் குழுவினர் பெலாரஸ் வந்தடைந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் 5வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷியாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தற்போதுமுன்வந்துள்ளது. பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த நிபந்தனை விதித்துள்ளதாகவும் ரஷிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனை ரஷியத்தரப்பு அரசுப் பிரதிநிதி விளாதிமிர் மெடின்ஸ்கியும் உறுதிப்படுத்தியுள்ளார்.