மத்திய பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் 22 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் தங்களுக்குச் சாதகமாகத் திரும்பும் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் உள்ளது.
230 இடங்களைக் கொண்டு மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு நவ. 17-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸýக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இங்கு 22 தொகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நிலையில் அவர்களது வாக்குகள் தங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும் என்ற நம்பிக்கையுடன் காங்கிரஸ் கட்சி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும், மத்திய பிரதேச முஸ்லிம் விகாஸ் பரிஷத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான முகமது மாஹிர்
கூறியதாவது:
மத்திய பிரதேசத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் வாக்கு சதவீதம் 3-4 சதவீதம் அதிகரித்தது. இதனால்தான் பாஜகவை விட சற்று கூடுதல் இடங்களைப் பெற முடிந்தது.
90 சதவீத சிறுபான்மையினரின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தால் கட்சியால் ஆட்சியமைக்க முடியும் என்று அப்போது மாநில காங்கிரஸ் தலைவரான கமல்நாத் தெரிவித்திருந்தார்.
அவரது அûழைப்பை ஏற்று சிறுபான்மையினர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தனர். இதன் மூலம் கட்சிக்கு கூடுதலாக 10-12 இடங்களுக்கு கிடைத்தன. இந்த இடங்களை 2008, 2013-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல்களில் கட்சியால் வெல்ல முடியவில்லை.
வாக்காளர்கள் பாஜகவிடம் கோபம் கொள்ளும்போது காங்கிரஸ் அரசைத் தேர்ந்தெடுக்கின்றனர். காங்கிரஸிடம் கோபம் கொள்ளும்போது பாஜகவைத் தேர்ந்தெடுக்கின்றனர். கடந்த 2011-இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மத்திய பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள்தொகை 7 சதவீதமாக உள்ளது. தற்போது அது 9-10 சதவீதமாக இருக்கக் கூடும். 47 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகள் கணிசமாக உள்ளன. 22 தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் வாக்குகள் உள்ளன.
47 தொகுதிகளில் 5,000 முதல் 15,000 முஸ்லிம் வாக்குகள் உள்ளன. 22 தொகுதிகளில் 15,000 முதல் 35,000 முஸ்லிம் வாக்குகள் உள்ளன.
முஸ்லிம் அல்லாதவர்களின் வாக்குகளையும் உள்ளடக்கிய காங்கிரஸின் பாரம்பரிய வாக்கானது அதன் வேட்பாளர்களுக்கு உரிய முறையில் கிடைப்பதில்லை. இது போன்ற வாக்காளர்களையும் வாக்குச்சாவடிக்கு வரவழைத்து வாக்களிக்கச் செய்வது காங்கிரஸின் பொறுப்பாகும் என்றார்.
குறிப்பாக கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸின் வாக்கு சதவீதத்தை (40.89) விட பாஜகவின் (41.02) வாக்கு சதவீதம் அதிகமாகும். எனினும் வெற்றி பெற்ற இடங்கள் என்று பார்த்தால் காங்கிரஸ் 114 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 109 இடங்களில் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து சமாஜவாதி, பகுஜன் சமாஜ் ஆகியவற்றின் எம்எல்ஏக்கள், சுயேச்சைகள் ஆகியவற்றின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியை அமைத்தது. எனினும் காங்கிரûஸச் சேர்ந்த சுமார் 20 எம்எல்ஏக்கள் ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் பாஜகவுக்குத் தாவியதால் 15 மாதங்களில் ஆட்சி கவிழ்ந்தது.