மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு நேற்று காலை 2006 கன அடியில் இருந்து இன்று காலை 2,249 அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 116.12 அடியாக இருந்த நிலையில், இன்று காலை 115.66 அடியாக சரிந்தது.
அணைக்கு வினாடிக்கு 2006 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வந்தது. அணையின் நீர் இருப்பு 86.71 டி.எம்.சியாக உள்ளது.
இந்நிலையில், அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 8,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.