மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் திறப்பு 65,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது.
- அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்தது. அணை ஏற்கெனவே நிரம்பி விட்டதால் அணைக்கு வரும் 65 ஆயிரம் கனஅடி காவிரி நீரும், உபரிநீராக முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதில் நீா் மின்நிலையங்களின் வழியாக 25,000 கனஅடி நீரும், உபரிநீா் போக்கியான 16 கண் பாலம் வழியாக 40,000 கனஅடி நீரும் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீா் மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது, நீா் இருப்பு 93.63 டி.எம்.சி ஆக உள்ளது.