சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் மூலமாக 12 சிற்றுந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார்.
சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து பயணங்களை எளிதாக்க மின்சார பைக், ஷேர் ஆட்டோ உள்ளிட்டவை செயல்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல மக்களின் பயன்பாட்டிற்காக சிற்றுந்துகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் வைத்து காணொலி மூலமாக தொடக்கிவைத்தார்.
ஆலந்தூர், விமான நிலையம், கோயம்பேடு, திருவொற்றியூர்போன்ற மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து இந்த மினி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 12 சிற்றுந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
கோயம்பேடு – மதுரவாயல்,மீனம்பாக்கம் – குன்றத்தூர்,ஆலந்தூர் – மடிப்பாக்கம், போரூர் ஆகிய வழித்தடங்களில் இரு மார்க்கமாகவும் சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.