கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் பார்த்து ரசிக்க மெரினாவில் அமைக்கப்படும் தற்காலிக நடைபாதையை நாளை மறுநாள் திறந்து வைக்கிறார் சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி.
கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று ரசிக்க எல்லா வருடமும் சென்னை மெரினாவில் தற்காலிக நடைபாதையானது சென்னை மாநகராட்சியால் அமைக்கப்படும். சுமார் ஒரு மாத காலம் இந்த நடைபாதை செயல்படும். இந்த தற்காலிக நடைபாதையால் மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் சென்று ரசிக்க முடியும். கடலை பார்த்து ரசிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் மெரினாவிற்கு வருகை தந்தவுடன், சென்னை மாநகராட்சியின் சார்பில் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அவர்களை பிரத்யேகமாக அமைக்கப்பட்ட நடைபாதையில், அழைத்து செல்வர்.
இந்த ஆண்டு அமைக்கப்பட்ட தற்காலிக நடைபாதையை நாளை மறுநாள் சென்னை மாநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வானது பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுகிறது. வருடம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கடலை அருகில் சென்று ரசிக்க மெரினாவில் நடைபாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் முன்வைத்து வருகின்றனர்.