புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டார்.
கூட்டம் முடிந்ததும் அவர் பேசும் போது, “ஒருமுறை மட்டும் பயன்படுத்தி பின்னர் தூக்கியெறியப்படும் 14 வகையானபிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ அரசு தடை விதித்துள்ளது .
இதனால் தமிழகத்தில் 3,000 பிளாஸ்டிக் தொழிற்சாலைகளுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது . தமிழகம் மூன்று ஆண்டுகளில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்றப்படும். பிளாஸ்டிக் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் மற்றும் உடல் நலத்திற்கும் தீங்குவிளைவிக்கும். எனவே மக்களிடையே பிளாஸ்டிக் பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறினார்.