தமிழகத்தில் ஆள் மாறாட்டம், மோசடி, அங்கீகாரம் இல்லாத பத்திரத்தைப் பதிவு செய்வது அதிகரித்துள்ளது. ஆள் மாறாட்டம் செய்வது, கிரயப் பத்திரம், வரி ரசீது, பட்டா, வாரிசு சான்றிதழ், இறப்புச் சான்றிதழைப் போலியாகத் தயாரித்து பத்திரப் பதிவுக்கு கொண்டு வருவது மோசடிப் பத்திரமாக வரையறுக்கப் பட்டுள்ளது. அதுபோன்ற பத்தி ரங்கள் பதிவானால் மாவட்டப் பதிவாளரால் விசாரணை நடத்தப் பட்டு, ரத்து செய்யப்படும் எனப் பதிவுத் துறை தெரிவித்துள்ளது.
மோசடி நபர்களுக்கு துணை யாகச் செயல்படும் சார்பதி வாளர்கள், ஆவண எழுத்தர்கள், சாட்சிக் கையெழுத்து போட்ட வர்கள் அனைவருக்கும் மூன் றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும் கிடைக்கும்.
இந்தச் சட்டத்திருத்த நடை முறைகள் குறித்து அனைத்து சார் பதிவாளர்கள் அலுவலகத் திலும் அறிவிப்புப் பலகைகள் வைக்கும்படியும் பதிவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.