தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு 6 மணியோடு நிறைவுபெற்றது.
21 மாநகராட்சிகள் ,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்களுக்கு, மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளுக்கும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளுக்கும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகலுக்குமான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, இன்றைய தினத்தில் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.
மாநகராட்சி பகுதிகளில் 15 ஆயிரத்து 158 வாக்குச்சாவடிகளும், நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளிலும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் 2½ கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். முன்னாள் ராணுவத்தினர் மற்றும், காவல் துறையினர் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மாலை 5 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 41.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பிப்ரவரி 22ம் தேதி, நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது