மக்கள் நீதி மய்யம் வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியைக் காண வேண்டும் என அக்கட்சித்தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு தற்போது வீட்டில் ஓய்வு பெற்று வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வெற்றி பெற வேண்டும்என விடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார்.
இதில் , கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும் பாதுகாப்பான முறையில் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும்கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து முன் ஜாக்கிரதையுடன் , பாதுகாப்பாக தேர்தல் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.