ஜப்பான் திரைப்படம் வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. அதற்கான விளம்பரப் பணிகளில் தீவிரமாக உள்ளார் படத்தின் நாயகன் கார்த்தி.
சில நாள்களுக்கு முன்னர் துபாய் சென்ற கார்த்தி அங்கு தொழிலதிபர்களையும் திரைப்பட தயாரிப்பாளர் கண்ணன் ரவியையும் சந்தித்தார்.
அதன் பின்னர் அவர் துபாயில் பணிபுரியும் தொழிலாளர்களைச் சந்திக்க ஊழியர்களின் தங்குமிடங்களுக்குச் சென்றார்.
தொழிலாளர்களுடன் மிகச் சாதாரணமாகப் பழகிய கார்த்தி அவர்களுக்கு இனிப்பு, பரிசு பொருட்கள் வழங்கி மகிழ்ந்தார். அவர்களுடன் தீபாவளியையும் அவர் கொண்டாடினார்.
“குடும்பத்துக்காக வலிகளை சுமக்கும் தொழிலாளர்கள் தான் உண்மையான ஹீரோக்கள்” என்றார் கார்த்தி. நடிகர் கார்த்தியின் இந்த பெருந்தன்மையால் அனைத்து தொழிலாளர்களும் மிகவும் மனம் நெகிழ்ந்து காணப்பட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.
இந்நிலையில் ஜப்பான் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நவம்பர் 10 முதல் 15ஆம் தேதிவரை 5 காட்சிகளுக்கு படத்தை திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒரு நாளுக்கு அதிகபட்சம் 5 காட்சிகளைத் திரையிடலாம். அனைத்து திரையரங்குகளிலும் காலை 9 மணிக்கு முதல்காட்சி தொடங்கப்பட வேண்டும். பின்னிரவு 1.30 மணிக்குள் இறுதிக்காட்சியை முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.