தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்து மதத்தினரின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி கருதப்படுகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது.தீபாவளி நாளில் காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர். அதன்பின், இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துக்களைப் பரிமாறியும் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
புதுமணத் தம்பதிகள் பெரியவர்களிடம் ஆசி பெற்று, தலைதீபாவளியை சிறப்பாகக் கொண்டாடினர்.