விடியா திமுக அரசின்
விடியாத வாக்குறுதிகள்! காற்றில் பறக்கவிடும் அவலம்!இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு குற்றச்சாட்டு
2024 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த தொடக்கப்பள்ளியில் காலி பணியிடங்களை முழுவதும் நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2024 நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்,சென்னை எழும்பூர டி பி ஐ வளாகத்துக்குமுன்பு நடைபெற்றது.
தமிழகத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டு, திமுக அரசுக்கு எதிராக
கோஷங்களை எழுப்பினர் … 35 நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்
அப்பொழுது செய்தியாளிடம் பேசிய இந்த உமா மகேஸ்வரி காஞ்சிபுரம் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறோம் 2009 அதன் பிறகு நாங்கள் பணிக்கு வந்தோம் சமவெளிக்கு சம ஊதியம் என்று கோரிக்கையை வலியுறுத்தி 35 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகிறோம் சுமார் 20000 ஆசிரியர்கள் நாங்கள் பதிக்கப்பட்டுள்ளோம் தமிழக முதல்வர் எங்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளனர் அதை நிறைவேற்ற கோரி நாங்கள் இந்த தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம் தேர்தல் கோரிக்கையை 311 நிறைவேற்றக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது சட்டமன்ற நடைபெற்று வரும் போது முதலமைச்சர் இவர்கள் பற்றி நாங்கள் கண்காணித்து வருகிறோம் இங்கே விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறியுள்ளார் அதை நாங்கள் வரவேற்கிறோம் தமிழக முதலமைச்சர் உடனடியாக எங்களுடைய கோரிக்கையை நிறைவேற்றி விட்டால் நாங்கள் உடனே பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க தயாராக இருக்கிறோம் எங்களுக்கு மனம் வருத்தமாக இருக்கிறது மாணவர்களுக்கு கல்வியை தர முடியாமல் இருக்கிறது ஆனால் முதல்வர் அறிவிப்புக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் மாண்புமிகு அமைச்சரும் நம்பிக்கை கொடுத்து உள்ளார் அவர்கள் அதே போல் நடந்து கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம் இந்தப் போராட்டம் எங்களுக்கு அரசாங்கம் வாக்குறுதி கொடுக்கும் வரை இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.