தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி ரவி மினி மீட்டிங் ஹால் அரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர்
பி ஆர் பாண்டியன் தலைமையற்றார்.
பி.அய்யாக்கண்ணு,கே எம்
ராமகவுண்டர், நாமக்கல் வேலுசாமி, மோகனூர் பாலசுப்பிரமணியன்,விழுப்புரம் கலிவரதன்,
தஞ்சை திருப்பதி சிவகங்கை
ஆதிமூலம்,மதுரை ராமர்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
32 மாவட்டங்களைச் சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்று தேர்தலில் விவசாயிகள் அணுகுமுறை குறித்து பேசினர்.
கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து பிஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டில் காவிரி முல்லைப் பெரியாறு உரிமைகள் பறிபோகிறது. ஏற்கனவே காவிரி பிரச்சனையில் திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை திரும்ப பெற்று காவிரி தமிழக உரிமை விட்டுக் கொடுத்தது.
தமிழக விவசாயிகள்தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு சட்டப்பூர்வமான உரிமை பெறப்பட்டுள்ளது. நடுவர் மண்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணை கட்ட முடியாது என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. இந்நிலையில் மேகதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தொடர்ந்த வழக்கில் அதற்கான திட்ட அறிக்கை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க அனுமதி வழங்கி உள்ளது. வழக்கை தமிழக அரசு முறையாக கையாளவில்லை என தெரியவருகிறது.
தமிழக முதலமைச்சர் ஐந்தாண்டு காலத்தில் மேகதாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் துணை முதலமைச்சர்
டி கே சிவகுமாரும் மாறி மாறி மேகதாட்டு அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்க கோரி மத்திய அரசின் நிர்பந்தம் செய்து வருகிறார்கள், தமிழக முதலமைச்சரின் மௌனம் மீண்டும் காவிரி உரிமையை கர்நாடகாவிற்கு பறிகொடுத்து விடுமோ?என்று அஞ்சத் தோன்றுகிறது.
முல்லை பெரியாறு அணையில்
அதிமுக ஆட்சி காலம் வரையிலும் 142 அடி நிரம்பிய பிறகுதான் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 136 அடியிலேயே தண்ணீரை திறந்து மதுரை மண்டலத்தை பாலைவனமாக மாற்றும் நடவடிக்கையில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 152 அடி கொள்ளளவு உயர்த்துவதற்கு பேபி அணை பலப்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.
ஆயிரம் தடுப்பணைகள் கட்டுகிறோம் என்று சொன்னார்கள் இது வரையிலும் ஒரு இடத்தில் கூட தடுப்பணைகள் கட்டப்படவில்லை. அணைகளின் கொள்ளளவை உயர்த்துவதற்கு தூர்வாரப்படும் என்ற அறிவித்தார்கள் ஆனால் அறிவுப்போடு நின்று கொண்டிருக்கிறது கல்விக்கடண் ரத்து செய்யப்படும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் வேளாண் கடன் ரத்து செய்யப்படும். சுங்க கட்டணம் ரத்து செய்யப்படும் என வெளியிட்ட பல்வேறு கோரிக்கைகளும் செயல்படுத்தாமல் திமுக அரசு ஏமாற்றிவிட்டது.
பயிர் காப்பீடு திட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வேளாண்துறை செயல்பட்டு விவசாயிகளுக்கு பயனில்லாமல் ஆண்டுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனங்களோடுகூட்டு சேர்ந்து கொள்ளைக்கு வழிவகைத்துள்ளது.
வேளாண் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் ஒட்டுமொத்தமாக முடங்கி கிடக்கிறது,
2021 இல் நெல் குவிண்டால் 1 க்கு ரூ 2500 வழங்கியிருந்தால் இன்றைக்கு ரூ 3300 விலை கிடைத்திருக்கும். கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ரூபாய் வழங்குவோம் என்றார்கள் வழங்காமல் ஏமாற்றி விட்டார்கள்.
மாவட்டங்கள் தோறும் விலை நிர்ணய குழுக்கள் அமைக்கப்படும் என்று உறுதி கூறினார்கள். அதையும் ஏற்படுத்தவில்லை. ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளையே தீவிரமாக கையாண்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 மூலம் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் முகவரியை அழித்துவிட்டனர். ஜனநாயக உரிமை பறிபோய் இருக்கிறது. இச்சட்டம் மூலம் ஆறுகள் ஏரிகள் குளம் குட்டைகள் உள்ளிட்ட விளை நிலங்கள், குடியிருப்பு மனைகள் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகிறது. கட்டுக்கடங்காத நில அபகரிப்பு தமிழக முழுமையிலும் தீவிரமடைந்துள்ளது.இதனை தட்டிக் கேட்கும் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறையில் அடைத்து கொடுமை படுத்துகிற மோசமான நிகழ்வு அரங்கேறி வருகிறது.
போராடும் விவசாயிகளை காவல்துறை மூலம் அச்சுறுத்தி மிரட்டுவதும், அவர்களை அடிமைகளை போல தமிழக அரசு நடத்தி வருவது வேதனை அளிக்கிறது.
எனவே இனி தமிழ்நாட்டில் திமுகவிற்கு விவசாயிகள் வாக்களிப்பது
விவசாயிகள் தற்கொலைக்கு சமமானது. வாக்களிக்க ஏற்க மாட்டோம்.
கூட்டத்தில் 38 கோரிக்கைகள் அடங்கிய பிரகடனத்தை இன்று வெளியிட்டு இருக்கிறோம். அதனை ஏற்றுக் கொள்கிற அரசியல் கட்சிகளை ஆதரிக்க தயங்க மாட்டோம்.வரும் மார்ச் 31ஆம் தேதி தமிழகத்தில் விவசாயிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் யாரை ஆதரிக்கிறோம் என்கிற முடிவுகளை திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்க உள்ளோம் என்றார்.
கூட்டத்தில் நன்னிலம் நடராஜன்,
பயரி கிருஷ்ணமணி,
நீடா பாலசுப்ரமணியன்,
இளைஞர் அணி தலைவர் மேலூர் அருண்,செயலாளர் ஒக்கநாடு மகேஸ்வரன், தூத்துக்குடி
அருமைராஜ், திருநெல்வேலி
ஆபிரகாம்,
புதுக்கோட்டை பத்மநாபன்,மதுரை அழகு சேர்வை, திருச்சி ராஜேந்திரன், செல்வம்,
காஞ்சிபுரம் ஹரிதாஸ், திருவண்ணாமலை நாராயணன், தர்மபுரி சின்னசாமி, கிருஷ்ணகிரி
அனுமந்தராஜ், கோவை அர்ஜுனன்,
மயிலாடுதுறை விஸ்வநாதன், திருவாரூர் சுப்பையன், சரவணன், தஞ்சை ரவிச்சந்திரன், பிரபாகரன், நாகப்பட்டினம் கருணைநாதன்,லால்குடி செல்வராஜ்,
ராணிப்பேட்டை சேலம் திருப்பத்தூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட 32 மாவட்டங்களில் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்ட தலைவர் கஜேந்திரன் நன்றி கூறினார்.