இந்தோனேசியாவில் கைதான குமரி மாவட்டத்தைச் சோ்ந்த 8 மீனவா்களை விடுவிக்கக்கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடந்த மார்ச்-7 ஆம் தேதி இந்தோனேசியா நாட்டு கடல் எல்லையை கடந்து ருஷா தீவில் மீன்பிடித்ததாக இந்தோனேசியாகடற்படைஅதிகாரிகளால் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களின் படகு மற்றும் வலையையும் கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், இந்தோனேசியா மற்றும் செஷல்ஸ் நாட்டில் கைதான தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தோனேஷியா மற்றும் செஷல்ஸ் நாடுகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் @DrSJaishankar அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.