🇮🇳 REPORTER TODAY 🇮🇳
WWW.REPORTERTODAY.IN
இன்றைய செய்திகள்✍️
(24.04.2023)
ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை
சென்னை: சென்னையில் ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளத்தாகவும் புகார்கள் எழுந்த நிலையில், திங்கள்கிழமை (ஏப்.24) அதிகாலை சென்னை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களிலும், கர்நாடகாவில் பெங்களூரு, மைசூரு, பெல்லாரி, தெலங்கானாவில் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு என 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.