சென்னையில்
அக்ரி எக்ஸ்போ-2022!
———
அக்ரி எக்ஸ்போ 2022 சென்னையில், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் வருகிற ஜூன் 3,4,5 தேதிகளில் நடக்கிறது.
இதில் மாநாடு, கருத்தரங்கம், காட்சிக் கூடம், பாரம்பரிய உணவுத் திருவிழா, கிராமிய வீர விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
தமிழக அரசின் சிறு குறு நிறுவனங்கள் துறை அமைச்சர் மாண்புமிகு தா மோ அன்பரசன் அவர்களை விவசாயிகள் சங்கத்தலைவர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார்.
அதேபோல், தமிழக அரசின் சென்னை பெருநகர
மாநகராட்சி ஆணையர் திரு.ககன்தீப்சிங் பேடி இ.ஆ.ப., தமிழக அரசின் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் திரு, அ.அண்ணாத்துரை, தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை இயக்குநர் திரு.எஸ் நடராஜன் இ.ஆ.ப., ஆகியோரையும் சந்தித்து சென்னை அக்ரி எக்ஸ்போ 2022க்கான அழைப்பிதழை வழங்கினார்.