உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீடக அதிநவீன கருவிகள் வரவழைக்கப்பட்டன.
கிடைமட்டமாக சுமார் 57 மீட்டர் தூரம் துளையிட்டு இடிபாடுகளை வெளியேற்ற வேண்டியிருந்தது. நவீன கருவிகளால் சுமார் 46 மீட்டர் தூரம் வரைதான் துளையிட முடிந்தது. அதன்பின், 12 மீட்டர் தூரம் வரை துளையிட வேண்டிய நிலையில் சிக்கல் ஏற்பட்டது.
அப்போதுதான் எலி வளை சுரங்க தொழிலாளரக்ள் (Rat-Hole Miners) வரவழைக்கப்பட்டனர். இவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 3 மீட்டர் தூரம் வரை தோண்டுவார்கள்.
இதனால் மூன்று நாட்களுக்கு மேல் ஆகலாம் என நினைத்திருந்தனர்.எலி வளை சுரங்க தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இடத்தை பார்த்ததும் எளிதாக தோண்டிவிடலாம் எனத் தெரிவித்து நேற்று முன்தினம் தங்களது பணியை தொடங்கினர்.
ஒருவர் உள்ளே சென்று இடிபாடுகளை மண்வெட்டி மற்றும் கைகளால் எடுத்து வெளியே அனுப்ப வேண்டும். வெளியில் இருப்பவர்கள் அதை இழுப்பு கையிறு மூலம் வெளியே கொண்டு வருவார்கள்.
இவ்வாறு அவர்கள் இடிபாடுகளை வெளியே கொண்டு வந்தனர். சுமார் 18 மணி நேரத்திற்குள் 12 மீட்டர் தூரம் வரை தோண்டி அசத்தினார்கள்.சிறப்பாக தோண்டி சிக்கியிருந்த தொழிலாளர்களை அடைந்தனர்.
எலி வளை தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை அடைந்ததும், ஆனந்தத்தில் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்த பணியில் ஈடுபட்டிருந்த மீட்புக்குழு அதிகாரி ஒருவர்