சீம்பழம்,பட்டறை கிராமங்களில் 400 ஏக்கர் விளைநிலங்கள் ஏரிகள்,சுடுகாடு கிராம சாலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் அகற்ற வலியுறுத்தி சட்டமன்றத் தேர்தல் புறக்கணிப்பு
– பிஆர் பாண்டியன் அறிவிப்பு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு திருவண்ணாமலை மாவட்ட மாநாடு பிரம்மதேசத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு  தே.நாராயணன் தலைமை வகித்தார்.மாநில பொதுச் செயலாளர்
வி கே வி துரைசாமி முன்னிலையேற்றார்.

மாநிலத் தலைவர் பி ஆர் பாண்டியன் பங்கேற்று பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு  சட்டம் 2023 மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் விளை நிலங்களை கார்ப்ரேட்டுகளுக்கதாரை வார்ப்பதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விளைநிலங்கள், ஏரிகள் குளம் குட்டை உள்ளிட்ட ஆறுகள் நீர் வழி பாதைகளையும் அபகரித்து கார்ப்பரேட்டுகளுக்கு தரவைக்கப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் அருகே சீம்பழம் கல்பட்டு பட்டறை உள்ளிட்ட மூன்று கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 400 ஏக்கருக்கு மேல் விளைநிலங்கள் ஏரிகள் குளம் குட்டைகள் உள்ளிட்ட சுடுகாடு இணைப்பு கிராம சாலை உள்ளிட்ட அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து சட்டவிரோதமாக டெக்கிரின் அண்ட் சொசைட்டி ஆப் மேக்கர் என்கிற நிறுவனத்திற்கு பட்டா வழங்கி பத்திர பதிவு செய்துள்ளதாக
.தெரிவிக்கின்றனர்ர்,

இந்நிறுவனம் சுற்று சுவர் அமைத்து  ஒட்டுமொத்த கிராமமும் முடக்கப்பட்டு அகதிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது,சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலங்களை கூட அறுவடை செய்ய முடியாத அளவிற்கு தடை செய்துள்ளனர்,

மேலும்
சுற்றுச்சுவருக்கு வெளிப்புறம் உள்ள விவசாயிகளுடைய விளை நிலங்களுக்கு கூட செல்ல முடியாத அளவிற்கு தடை ஏற்படுத்தியுள்ளனர்.ஒட்டுமொத்தமாக கிராமம் மற்ற கிராமங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.

எனவே  உடனடியாக சுற்று சுவரை அகற்றி சட்டவிரமாக வ
பத்திரப்பதிவு பட்டா வழங்கியிருக்கிற அனைத்து நடவடிக்கைளையும் முதலமைச்சர் தலையிட்டு ரத்து செய்ய வேண்டும். இது குறித்து உண்மை நிலையை மாவட்ட அமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும்.உத்தரபிரதேசம் பீகார் போன்ற மாநிலங்கள் பத்தாண்டுகளுக்கு முன்னால் தாதாக்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. தமிழ்நாடும் அந் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதோ? என்கிற அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பாலாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து செல்லப்படுகிறது.இதனால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கான ஆழ்குழாய் கிணறுகள் வற்றி போடும் நிலத்தடி நீர் பறிபோகும்.  அப்பகுதியில் பாலாற்றில் தடுப்பணை
கட்டினால் தான் நிலத்தண்ணீரை பாதுகாக்க முடியும். எனவே குடிநீருக்கு தண்ணீர் எடுப்பதில் தடையில்லை தடுப்பணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்திட வேண்டும்.

நெல் கொள்முதல் தடை இன்றி நடைபெற வேண்டும் பிரம்மதேசத்தில் நிரந்தர கொள்முதல்
நிலையம் அமைத்திட வேண்டும்.

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் அனாதி இன நிலம் கைப்பற்றுவதற்கான முயற்சியை ஈடுபடுவதை கைவிட வேண்டும் இதனை வலியுறுத்தி விரைவில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது என்றார்,

கூட்டத்தில் மாவட்ட தலைவராக து.பிச்சாண்டி செயலாளராக  தெ.நாராயணன் பொருளாளராக வே ஜனார்த்தனன் துணைச் செயலாளராக
ப.விக்னேஷ் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர் இவர்கள் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டக் குழுவாகும் செயல்படுவார்கள்.
காஞ்சிபுரம் ஹரிஹரன் உள்ளிட்ட200-க்கும் மேற்பட்டோர்
பங்கேற்றனர்.

முன்னதாக சீம்பழம்,கல்பட்டு, பட்டறை ஆகிய கிராமங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சுற்று சுவர் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்டு விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *