பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் இன்று நடைபெற்றது
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சங்கர் தினேஷ் குமார் நந்தகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்துகொண்டு தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கணேசன் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் அழைத்துச் சென்றனர் அப்பொழுது 50க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டதால் பெண் காவலர்கள் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்றனர் இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
*முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய பல்நோக்கு மருத்துவமனை சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் கணேசன் பேசுவையில்*
அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் இந்த காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றோம் பல ஆண்டுகளாக பணி புரியும் இந்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், அவர்களுக்கு 31 நாள் ஊதியம் வழங்க வேண்டும் மாதம் அவர்களுக்கான வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்
அனைத்து பணியாளர்களின் கோரிக்கையை ஏற்கும் அரசு எங்களது கோரிக்கைகளையும் ஏற்று எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம் என தெரிவித்தார்.