‘கோயில் சொத்துகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கின்றனர். கோயில் சொத்துகளை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை’ என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் இந்திய தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் உலக பாரம்பரிய வார விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். விழாவில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் நமது பாரம்பரியத்தை எடுத்து சொல்வதற்கான வாய்ப்பு இல்லை. சில சமயம் அதில் அரசியல் நுழைந்து, சர்ச்சைகள் உருவாகிறது.
கோயில் சொத்துகளை திருடி வெளிநாடுகளுக்கு விற்கின்றனர். கோயில் சொத்துகளை விற்கும் பணம் யாருக்கு செல்கிறது என தெரியவில்லை. நமது கோயில் சொத்துகள் வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டது. வெளிநாடு அருங்காட்சியகத்தில் இருக்கும் கோயில் சொத்துகளை நாம் ஆச்சரியமாக பார்க்கிறோம்
இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.