குளிர்காலம் துவங்கியதை அடுத்து, உத்தர காண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, கேதார்நாத் ஆகிய கோவில்கள் மூடப்பட்டன.
உத்தரகாண்ட் மாநிலம், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாநிலத்தில், கேதார்நாத், யமுனோத்ரி, பத்ரிநாத் உள்ளிட்ட, பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த ஆண்டு குளிர்காலம் துவங்கியுள்ளதை அடுத்து, கேதார்நாத், யமுனோத்ரி ஆகிய கோவில்கள், முறையான பூஜை மற்றும் சடங்குகளுக்குப் பின், மூடப்பட்டன.
குளிர்காலம் முழுவதும் உகிமாத் என்ற கிராமத்தில் சிவன் சிலையை வைத்து வழிபாடு நடத்தப்படும். இதற்காக, கேதார்நாத்திலிருந்து, சிவன் சிலையுடன், உகிமாத் நோக்கி, ஊர்வலம் துவங்கும். குளிர்காலம் முழுவதும் அங்கு வழிபடப்படும்.