தமிழ்நாடு சட்டசபையில், கடந்த 13-9-2021 அன்று நடைபெற்ற காவல் துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசுகையில், ‘காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல், தலைமைக் காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தினருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர் முதல், தலைமைக் காவலர் வரையிலான போலீசார் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணை இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் நலனை கருத்தில்கொண்டு, முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் போலீசாருக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க

WhatsApp & Call Buttons