கடலூர் மாவட்டம் கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலராக முக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டு பணியில் சேர்ந்த நாள் முதலே அலுவலகத்தில் இடைத்தரகர்கள் இருக்க கூடாது மக்களே நேரடியாகத் அலுவலகத்தை தொடர்பு கொண்டு அனைத்து வசதிகளையும் பெற வழிவகை செய்து ஒரு சில இடைத்தரகளால் தொலைபேசியில் கொலை மிரட்டலுக்கு ஆளானார்.
இப்படிப்பட்ட இடைத்தரகர்களால் தான் பொது மக்கள் தங்களுடைய வேலையை நேரடியாக அலுவலகம் சென்று பெற இயலாத அச்சமான சூழல் ஏற்படுகிறது.
கடந்த ஆட்சியில் பல்வேறு குளறுபடிகளால், பொது மக்களுக்கு கணினி மற்றும் இணையதளம் மூலம் நடைபெற வேண்டிய பணிகள் உரிய நேரத்தில் நடைபெறாமல் காலதாமதம் ஏற்பட்டு, பொதுமக்கள் அலைச்சல் மற்றும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டனர்.
இவ்வாறான சிரமங்களை மாற்றும் நேர்மையான சிறப்பான மக்கள் பயன் பெறும் முறையில் நடைபெறும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் நற்பெயருக்கும், போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நற்பெயருக்கும், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் நற்பெயருக்கும், கடலூர் மாவட்டத்தில் இருந்து அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் அவர்களின் நற்பெயரையும் கலங்கம் விளைவிக்கும் இந்த விஷயத்தில் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும் உடனே நடவடிக்கை எடுத்து ஆர்டிஓ அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கியும் ,பொது மக்கள் நேரடியாகத் பயன் பெற அலுவலகத்தின் வெளியே அமைந்துள்ள இடைதரகர்களின் அலுவலகங்களை சீல் வைப்பார்களா என்று பொது மக்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.