கோயம்பேடு பகுதியில் 35 கோடி ரூபாய் கடன் வாங்கி தருவதாகக் கூறி போலியான குளோபல் பைனான்ஸ் மூலம்
70 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஹரிநாடார் மேலும் ஒருவர் என இருவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, பணம் ரூ.12.5 லட்சம், 7 செல்போன்கள் மற்றும் 2 Dongle கருவிகள் பறிமுதல் செய்தனர்!

சென்னை, கோயம்பேட்டைச் சேர்ந்த ஆனந்த்குமார் என்பவர் தான் சரக்குகள் ஏற்றி செல்லும் லாஜிஸ்டிக் தொழில் நடத்தி வருவதாகவும், அந்த தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக தனது உறவினர் மூலம் அறிமுகமான பாலசுப்ரமணியன் (எ) பாலு என்பவரை அனுகி அவர் மூலம் அறிமுகமான ஹரி நாடார் மேலும் சிலர் வாட்ஸ் ஆப் அழைப்பின் மூலம் தொடர்பு கொண்டு, ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாகவும்.
அதற்கு 2 சதவிகிதம் செயல்முறை கட்டணமாக 70 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என கூறியதாகவும்,
இவர்களின் வாக்குறுதியை நம்பி, புகார்தாரர் 70 ரூபாய் லட்சம் பணத்தை ஹரி நாடார் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார்

பின்னர் அவர்களிடமிருந்து மொத்தம் ரூ.35 கோடிக்கான பேங்க் ஆப் பரோடா வங்கியின் 4 வரைவோலைகள் பெற்று, அதில் 3 வரைவோலைகளை வங்கியில் செலுத்திய போது, அவை போலியானவை என உறுதி செய்யப்பட்டது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஆனந்த்குமார்,கடந்த 2025ம் ஆண்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் கொடுத்ததின்பேரில், மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி புலனாய்வு பிரிவு (EDF-I) உதவி ஆணையாளரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டனர்.

இவ்வழக்கில் உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திட,சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், உத்தரவிட்டதின் பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் (பொறுப்பு மத்திய குற்றப்பிரிவு) G.கார்த்திகேயன், தலைமை, வழிகாட்டுதலின் பேரில்,
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார்
விசாரணையின் போது தலைமறைவாக இருந்த
நெல்லையை சேர்ந்த ஹரி நாடார் என்பவரை
போலீசார் கைது செய்தனர். இதில் அவர் முக்கிய மூளையாக செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது

மேலும் நெல்லை ஹரி நாடார் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து குளோபல் பைனான்ஸ் கம்பெனி என்ற போலி நிதி நிறுவனத்தை உருவாக்கி, IDFC வங்கியில் பெயரளவில் கணக்கு ஆரம்பித்து, அதன் மூலம் தான் புகார்தாரரர் வசமிருந்து ரூ.70 லட்சத்தை மோசடியாக பெற்றுக்கொண்டு, 4 போலியான வரைவோலைகள் (DD) தயார் செய்து, புகார்தாருக்கு கொடுத்து மோசடி செய்துள்ளது தெரியவந்தது

இவ்வழக்கில் தொடர்புடைய சேலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மற்றும் நெல்லை ஹரி நாடார் ஆகிய இருவரையும்சேலம் மற்றும் திருச்சியில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஹரி நாடார் என்பவரிடமிருந்து ரொக்க பணம் ரூ.12.5 லட்சம், 7 செல்போன்கள் மற்றும் 2 Dongle கருவிகள் கைப்பபற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் இன்று சென்னை, எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இவ்வழக்கின் மற்ற தலைமறைவு குற்றவாளிகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர்.

 

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *