துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் சார்பில் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகம் வரை மெட்ரோ ரெயில் சேவையானது விரிவுபடுத்தப்பட்டது. ‘ரூட் 2020’ என்ற இந்த புதிய வழித்தடத்தில் துபாய் ஜெபல் அலி பகுதியில் இருந்து கண்காட்சி வளாகம் வரை மெட்ரோ ரெயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது உலக கண்காட்சி தொடங்கியதை முன்னிட்டு பொதுமக்கள், பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என அனைவரும் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பலரும் தங்கள் சொந்த வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இதில், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் எக்ஸ்போ 2020 கண்காட்சிக்கு வளாகத்திற்கு பிரான்ஸ் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்துறை மந்திரி பிராங்க் ரீஸ்டர் அந்நாட்டின் தொழிலதிபர்கள், வர்த்தகர்களுடன் மெட்ரோ ரெயிலில் வந்தார்.