உத்திரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அடுத்த 5 ஆண்டுக்கு விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரப்பிரதேசத்திலேயே தங்கி பிரசாரம் செய்து வருகிறார்.